×

வீட்டில் தனியாக இருந்த காதலி.. தாயின் கண் முன்னே காதலன் செய்த வெறிச்செயல்!

நந்தினியும், தினேசும் சிறுவயது முதல் ஒன்றாக படித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. அவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். மேலும் செல்போன் மூலமும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
 

தினேசுக்கு மது, கஞ்சா, பெண்களுடன் தொடர்பு என தகாத பழக்கங்கள் இருந்து வந்துள்ளது. இதனால் நந்தினி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த தினேஷ் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்த அதற்கு நந்தினி உன்னை திருமணம் செய்வதற்கு நான் சாவதே மேல் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தினேஷ் அப்படியென்றால் செத்துப் போ என வீட்டில் இருந்த ஒரு துப்பட்டாவால் நந்தினியின் கழுத்தை இறுக்கியுள்ளார். மேலும் தான் கொண்டு வந்திருந்த சாணி பவுடரை(விஷம்) நந்தினியின் வாயில் ஊற்றினார்.

சிறிது நேரத்தில் வந்த அம்மா மகளின் நிலைகண்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சிகிச்சை பலனின்றி நந்தினி மரணம் அடைந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News