தனது அழகான தமிழ் மற்றும் வசீகர குரலால் தமிழ் ரசிகர்களை வசியம் செய்தவர் தான் இலங்கை பெண் லாஸ்லியா. இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த லாஸ்லியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழ் காரணமாக லாஸ்லியாவிற்கு தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் லாஸ்லியா இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இப்படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது தன்னுடன் பிக்பாஸ் வீட்டில் சக போட்டியாளராக பங்கேற்ற தர்ஷன் உடன் இணைந்து லாஸ்லியா நடிப்பில் உருவாகியுள்ள கூகுள் குட்டப்பன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் பிரபல இயக்குனரும் நடிகருமான கேஎஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லாஸ்லியா சமீபத்தில் அவரது பிறந்தநாளை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். மேலும் அவரின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் அடங்கிய வீடியோவை அவர் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனை கண்ட பலரும் லாஸ்லியாற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதுதவிர அந்த வீடியோவில் நடிகர் தர்ஷனும் உள்ளார். முன்னதாக பிக்பாஸ் இல்லத்தில் இவர்கள் இருவரும் அண்ணன் தங்கை என பழகி வந்தனர். ஆனால் சமீபத்தில் கூகுள் குட்டப்பன் பட புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய லாஸ்லியா தர்ஷனை நண்பர் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கொண்டாட்டத்தில் கவின் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை காண இங்கே க்ளிக் செய்யவும்
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…