×

லோஸ்லியா தந்தை மரணம் இயற்கையானதா? வெளியான ரிபோர்ட்!.. உண்மையை உடைத்த கனடா அரசு!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த லோஸ்லியா தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராகிவிட்டார். சென்னையில் தங்கி படங்களில் கவனம் செலுத்தி வரும் லோஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் திடீர் என்று மரணம் அடைந்தார்.

 

அவரின் மரண செய்தி அறிந்த ரசிகர்கள் லோஸ்லியாவுக்கு ஆறுதல் கூறினார்கள். இந்நிலையில் மரியநேசன் படுக்கையில் பிணமாகக் கிடந்த வீடியோ வெளியாகி வைரலானது. மரியநேசன் இயற்கையாக இறக்கவில்லை அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என்றெல்லாம் வதந்தி பரவியது. இதை பார்த்த லோஸ்லியா மற்றும் கவின் ரசிகர்கள் கோபம் அடைந்தனர். 

இறந்த ஒருவர் பற்றி தவறாக பேசுவது நல்லது இல்லை என்றார்கள்.இந்நிலையில் மரியநேசனின் பிரேத பரிசோதனை அறிக்கையை கனடா அரசு வெளியிட்டுள்ளது. அதில் மரியநேசனின் மரணம் இயற்கையே என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரியநேசனின் உடலை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

ஓரிரு வாரத்தில் மரியநேசனின் உடல் இலங்கைக்கு கொண்டு வரப்படுமாம். இதற்கிடையே மரியநேசனின் மரணம் குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என்று அவரின் மைத்துனர் கேட்டுக் கொண்டுள்ளார்

From around the web

Trending Videos

Tamilnadu News