×

அழுவதை தவிர வேறு வழியில்ல!...லாஸ்லியா நிலமை யாருக்கும் வரக்கூடாது...

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் நேற்றுமுன் தினம் கனடாவில் தூக்கத்தில் ஏற்பட்ட மாரடைப்பில் மரணமடைந்தார்.

லாஸ்லியாவின் சொந்த ஊர் இலங்கை. அங்குதான் அவரின் தாய் மற்றும் 2 தங்கைகள் வசித்து வருகின்றனர். எனவே, அவர் அங்கு செல்ல வேண்டும். ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விஷா கிடைப்பதில் சிக்கல். எனவே, அவருக்கு விஜய் டிவி பிக்பாஸ் டீமும், அவருடன் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொண்டவர்களும் களம் இறங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

ஒருபக்கம், கனடாவில் இருந்து மரிய நேசனின் உடலை கொண்டு வருவதில் சிக்கல். அவர் பணிபுரியும் நிறுவனம் மற்றும் கனடா அரசிடம் இருந்து சில ஆவணங்களை பெற்ற பின்னரே அவரை உடலை விமானம் மூலம் இலங்கை எடுத்து வரமுடியும். அதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும் எனத்தெரிகிறது.

எனவே, எப்போதும் அழுது கொண்டே இருக்கிறாராம் லாஸ்லியா. அவருக்கு அவரின் நண்பர்கள் தொடர்ந்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News