வாம்மா செல்லாக்குட்டி!.. ஒரே ஒரு போட்டோவில் தெறிக்கவிட்ட லாஸ்லியா....

பிக்பாஸ் நிகழ்ச்சி உலகளவில் பெரும் புகழ் பெற்றது. பல மொழிகளை கடந்து தமிழிலும் தொடங்கப்பட்டு பிக்பாஸ் நான்காவது சீசனும் முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சில பிரபலங்கள் செம டாப்பில் பயணிப்பதும் வாடிக்கையாகி இருக்கிறது. அந்த வகையில், சீசன் மூன்றில் கலந்து கொண்டவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மரியநேசன். கொள்ளை அழகு கிறங்கடிக்கும் பேச்சால் ரசிகர்களை கவர்ந்தார். நிகழ்ச்சியில் சக போட்டியாளரான கவினுடன் காதல் வலையில் வீழ்ந்து மேலும் புகழை பெற்றார்.
இதை தொடர்ந்து, முழு நேர நடிகையாக உருவெடுத்தார். அது அவருக்கு பல வாய்ப்புகளைப் பெற்று தந்தது. கிரிக்கெட்டர் ஹர்பஜன் சிங் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கும் ‘ஆண்டிராய்டு குஞ்சப்பன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும், போட்டோஷுட்களை செய்து இன்ஸ்டாகிராமில் படங்களை வெளியிட்டு வருவார்.
இந்நிலையில், செம அழகாக போட்டோஷூட் செய்யப்பட்ட லாஸ்லியாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாக வலம் வருகிறது..