×

ஆத்தாடி... பிக்பாஸிற்கு பிறகு லாஸ்லியா சேர்த்த சொத்து இவ்வளவா!

லாஸ்லியாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

 

கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியாவின் ஆர்மி அவரது புகழை பாடிக்கொண்டு லாஸ்லியாவை தினந்தோறும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கிக் கொண்டிருந்தனர்.

பிக்பாஸில் கிடைத்த புகழை வைத்து லாஸ்லியா தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதுவும் முதல் படத்திலே பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு ஜோடியாக . "பிரண்ட்ஷிப்"  என்ற படத்தில் நடித்துள்ளார். ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கும் இப்படத்தை ஷேண்டோ ஸ்டுடியோ & சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் காமெடி நடிகராக சதீஷ் நடிக்கிறார். மேலும், நடிகர் ஆரிக்கு  கதாநாயகியாக ஒரு படத்தில் நடிக்கிறார். இதையடுத்து மற்றொரு ஹீரோவுடன் புதுப்படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில் முதல் இரண்டு படத்திற்கும் லாஸ்லியா தலா 25 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார். அத்துடன் பிக்பாஸ் மூலம் கிடைத்த வருமானம் என மொத்தம் சேர்த்து இதுவரை ரூ. 50 லட்சத்திற்கும் அதிகமாக சொத்து மதிப்பு உள்ளதாக யூகிக்கமுடிகிறது. இவ்வளவு குறுகிய காலத்திலே நடித்து இன்னும் ஒரு படம் கூட வெளியாகாத போதே இப்படி வளர்ந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News