×

பேஸ்புக் மூலம் காதல்.. நேரில் பார்த்தால் அதிர்ச்சி.. பெண் எடுத்த அதிரடி முடிவு

சிவகங்கை மாவட்டத்தில் வசித்து வந்தவர் பவித்ரா(23). பட்டதாரியான இவர் முகநூல் மூலமாக விக்னேஷ்வரன் என்பவரோடு பழகியுள்ளார். அவர் பிசிஏ முடித்துவிட்டு வீட்டிலிருந்த படி ஆன்லைன் மூலம் பொருட்களை விற்பனை செய்து வருகிறார். இவர்களின் நட்பு நாளடைவில் காதாலாக மாறியுள்ளது.
 

ஆனால், விக்னேஷ்வரன் குள்ளமானவர். அவர் வெறும் 4 அடி உயரம் மட்டுமே கொண்டவர் என்பது பவித்ராவுக்கு தெரியவந்தது. ஆனாலும், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதால் நீயே என் கணவன். வாழ்க்கை துணைவன் என பவித்ரா கூறிவிட்டார்.  ஆனால், பவித்ராவின் வீட்டில் அவரின் காதலை ஏற்கவில்லை. விக்னேஷ்வரன் உனக்கு சரியான ஜோடி கிடையது என கூறி அவர் மனதை மாற்ற முயன்றுள்ளனர். 

எனவே, வீட்டிலிருந்து வெளியேறிய பவித்ரா, கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நண்பர்களின் முன்னிலையில் விக்னேஷ்வரனை திருமணம் செய்து கொண்டார். அதன்பின், தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மிரட்டுவதாக கூறி காவல் நிலையத்தில் பவித்ரா புகார் அளித்தார். எனவே இரு குடும்பத்தினரையும் அழைத்து போலீசார் சமாதானம் பேசினர். ஆனால், பவித்ராவின் காதலை ஏற்க முடியாது.. இவள் எங்கள் மகளே அல்ல எனக்கூறிவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். ஆனால், அவர்களின் காதலை ஏற்றுக்கொண்ட விக்னேஷ்வரனின் பெற்றோர் புதுமண தம்பதிகளை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

குள்ளத்தை ஊனமாக கருதாமல் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து விக்னேஷ்வரனை கரம் பிடித்த பவித்ராவை அவர்களின் நண்பர்கள் பாராட்டி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News