காதல் ஒரு NONSENSE.... இங்க எல்லாமே காமம் தான் - ஆடுகளம் நடிகர் பளீச்!

 
gm kumar

நடிகர் ஜி எம் குமார்:

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக தென்படுபவர் தான் நடிகர் ஜி எம் குமார். இவர் ஆடுகளும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரத்தினசாமி (கருப்பு) என்ற கேரக்டரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 

இவர் திரைப்பட நடிகர் என்பதையும் தாண்டி திரைப்பட திரைக்கதை எழுத்தாளர் மற்றும் இயக்குனராகவும் இருந்து வருகிறார். இயக்குனர் பாக்யராஜ் இடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பிறகு பிரபுவை வைத்து அறுவடை நாள் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக இயக்குனராகினார். 

gm kumar

தொடர்ந்து சில திரைப்படங்களில் மிக முக்கியமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார். அந்த வகையில் பாலா இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் திரைப்படத்தில் ஜி எம் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் ஜமீன் ரோலில் நடித்திருந்து குறிப்பிடத்தக்கது.

காதல் ஒரு NONSENSE....

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் காதல் மற்றும் காமம் இடையிலான வித்தியாசத்தை குறித்து பேசினார். அதாவது காதல் சொல்வதெல்லாம் நான்சென்ஸ்.... இங்க காமம் மட்டும் தான் இருக்கு. காதல் எப்போ வரும்னா வயசு ஆகி உனக்கு நான்... எனக்கு நீ என்ற ஒரு காலம் வரும் அதற்கு பெயர் தான் காதல்.

அதுக்கு முன்னாடி இருக்குற எல்லாமே காமம் தான். ஆனால், இங்கு கவிதை எழுதுபவர்கள் எல்லாம் காதல் என்று பொய்யாக கூறி அதை சித்தரித்து விட்டார்கள். இங்கு இருப்பது எல்லாமே காமம் தான் என கூறி இருக்கிறார். இவரின் எந்த எதார்த்தமான பேச்சு உண்மை தான் இவர் சொல்வது சரி என ரசிகர்கள் பலரும் கூறி வருகிறார்கள். 

Tags

From Around the web