தனுஷ் மருமகன் படம் ஓடிடியில் வந்துடுச்சு!.. லவ் ஓ லவ் எந்த ஓடிடியில் வந்துருக்குன்னு பாருங்க!..

 
pavish

நடிகர் தனுஷின் மருமகனான பவிஷ் நாராயண் நடிப்பில் உருவாகி, ஜூலை 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'லவ் ஓ லவ்' திரைப்படம், இன்று ஜூலை 31 முதல் அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது.

மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ள இந்த காதல்-நகைச்சுவை திரைப்படத்தில் பவிஷ் நாராயணுடன் நாக துர்கா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். படத்தை தினேஷ் ராஜ் மற்றும் ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரித்துள்ளனர்.

lol

இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகள் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. ரகுவரன் என்ற ஐடி நிறுவன ஊழியர், காதலியான அவந்திகாவின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக க்ரேடிட் கார்டை அதிகமாக பயன்படுத்தி, பெரும் நிதிச் சிக்கலில் சிக்கிக் கொள்கிறார்.

கடன் சுமை அதிகரிப்பதுடன் வேலை இழப்பும் ஏற்பட, ரகுவரனின் வாழ்க்கை முற்றிலும் மாறுகிறது. இந்தச் சூழலில் இருவரின் உறவிலும் விரிசல் ஏற்படுகிறது. பின்னர், ரகுவரன் அனுபவித்த பொருளாதாரப் போராட்டத்தை அவந்திகாவும் நேரடியாக உணர வேண்டிய நிலை உருவாகிறது. அதன்பிறகு அவர்களது வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதே படத்தின் மீதமுள்ள கதையாக அமைந்துள்ளது.

திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள 'லவ் ஓ லவ்', குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய காதல் திரைப்படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு புதிய தேர்வாக அமைந்துள்ளது.

Tags

From Around the web