அனிருத் வெளியிடும் லவ் ஓ லவ் டிரைலர்
நடிகர் பவிஷ் நடிப்பில் லவ் ஓ லவ் படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாகிறது.
Jun 26, 2026, 12:51 IST
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் மூலம் அறிமுகம் ஆனவ்ர் பவிஷ். தனுஷ் சகோதரி மகனான இவரது முதல் படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளிவந்து தோல்வி அடைந்தது.
பவிஷ் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் லவ் ஓ லவ். புதிய இயக்குனரான மகேஷ் ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் பவிஷுடன் நாக துர்கா, கே.எஸ்.ரவிக்குமார், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன் வெளியான இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் லவ் ஓ லவ் படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. முன்னணி இசையமைப்பாளர் அனிருத் டிரைலரை வெளியிடுகிறார். இந்த படம் வருகிற ஜூலை 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
