×

லவ் யூ பேபி மா...  இறந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி உருக்கமான பதிவு!

கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த 2018ம் ஆண்டு தமிழ் நடிகை மேக்னா ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். மேக்னா ராஜ் தமிழில் காதல் சொல்ல வந்தேன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர்.

 

நடிகர் அர்ஜுனின் உறவினரான  நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கடந்த மாதம் 7ம் தேதி மதியம் தனது குடும்பத்தினருடன் மதிய உணவு அருந்திக் கொண்டிருந்த பொழுது திடீரென்று மூச்சுத் திணறல் காரணமாக போராடியுள்ளார். உடனடியாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சுய நினைவு  இல்லாத நிலையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு  அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு  ஏற்கெனவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். இந்நிலையில் அவரது மனைவி குடும்ப பெண்களுடன் சேர்ந்து சிருவின் புகைப்படத்தின் அருகே அமர்ந்து சிரித்தபடி எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்டு " அன்புள்ள சிரு... சிரு என்றால் கொண்டாட்டம்.

என் சிரிப்பிற்கு காரணம் சிரு. அவர் எனக்கு அளித்தது விலைமதிப்பற்றது எனது குடும்பம். முடிவில்லாமல் நாம் ஒன்றாக இணைந்திருப்போம். அன்பு, மகிழ்ச்சி நேர்மை என ஒவ்வொரு நாளும் நீ விரும்பியது போலவே இருக்கிறது. நாங்கள் எல்லோரும் உன்னை நேசிக்கிறோம் பேபி மா'' என்று கூறி பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் நீங்கள் எப்போதும் இப்படி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று  கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம் என கூறி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News