×

 லவ் யூ ஆல், மீண்டும் விரைவில் சந்திப்போம்...  திரிஷாவின் அதிரடி முடிவு!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்துள்ளவர் த்ரிஷா. இவர் பதினைந்து வருடங்களுக்கு மேலாக தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகக் கோலோச்சிக் கொண்டிருக்கிறார். தற்ப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அதிக கவனத்துடன் இருந்து வருகிறார்.

 

அந்தவகையில் ராங்கி, பரமபதம் விளையாட்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களின் வேலைகள் கொரோனா ஊரடங்கினாள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்க்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வந்த த்ரிஷா அதிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பதிவிட்டுள்ள த்ரிஷா  "வெளியுலகத்தில் இருந்து சற்று விலகி இருப்பது மனதிற்கு தேவைப்படுகிறது, அதனால் டிஜிட்டலில் இருந்து சற்று விலகி இருக்கப் போகிறேன். வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள், இதுவும் கடந்து போகும், லவ் யூ ஆல், மீண்டும் விரைவில் சந்திப்போம்!" என்று கூறி பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News