Categories: Cinema News latest news

லவ்வர் படத்துக்கு கூட அது நடந்துடுச்சு!.. ரஜினியோட லால் சலாம் படத்துக்கு இன்னும் நடக்கலையே!..

படத்தின் ஹார்ட் டிஸ்க்கே காணோம் என கொஞ்சம் கூட பேக்கப் வைத்துக் கொள்ளாத அளவுக்கு பொறுப்பே இல்லாமல் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் படத்தின் தோல்வி குறித்து பேசி வருவது அந்த படம் ஓடிடியில் வெளியானால் கூட ரசிகர்களை பார்க்க வைக்காது என்றே தெரிகிறது.

பிப்ரவரி 9ம் தேதி வெளியான லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் அவருக்கு போட்டியாக விக்ராந்த் லீடு ரோலிலும் நடித்திருந்தனர். விக்ராந்தின் அப்பா மொய்தீன் பாயாக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தால் என் பேரே கெட்டுப் போச்சு.. தியாகராஜன் சொன்ன பகீர் தகவல்

ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியின் தாக்கம் இந்த படத்துக்கு பக்க பலமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மொத்தமாக படம் எடுபடாமல் தோல்வியடைந்தது. அந்த படத்துக்கு போட்டியாக வெளியான மணிகண்டன் நடித்த லவ்வர் படமே விரைவில் ஓடிடியில் வெளியாக போகிறது.

ஆனால், இன்னமும் லால் சலாம் படத்தின் டிஜிட்டல் விற்பனை நடைபெறவில்லை என்கின்றனர். மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் 160 கோடி வசூல் செய்த நிலையிலும், அந்த படத்துக்கு 10 கோடிக்கு அதிகமாக தர முடியாது என ஓடிடி நிறுவனங்கள் கறார் காட்டி வரும் நிலையில், வெறும் 16 கோடி மட்டுமே வசூல் செய்த லால் சலாம் திரைப்படம் பல கோடிகளை கேட்டு வருவதால் தான் இன்னமும் டிஜிட்டல் உரிமம் விற்பனையாகவில்லை என்றும் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பாக்கியாவுக்கு போட்டியாக களமிறங்கும் கோபி… இதுலையாவது ஜெயிப்பீங்களா சாரே!..

லவ்வர் திரைப்படம் வரும் மார்ச் 27ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மணிகண்டன், ஸ்ரீகெளரி பிரியா, கண்ணா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Saranya M
Published by
Saranya M