×

குறைந்த விலையில் காட்டேஜ் : ஆசைப்பட்டால் அழகிகள் ! சுற்றுலாப் பயணியை அதிரவைத்த கொடைக்கானல் விபச்சாரம் !

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து விபச்சாரம் நடத்தி வந்த புரோக்கரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

 

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து விபச்சாரம் நடத்தி வந்த புரோக்கரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த பிரேம் குமார் என்பவர் கொடைக்கானலுக்கு தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள அப்சர்வேட்டரி பகுதியில் அவர்களைத் தொடர்புகொண்ட மோகன் ராஜா என்பவர் தன்னிடம் குறைந்த விலையில் காட்டேஜ்கள் இருப்பதாகவும் அதில் வட இந்திய அழகிகள் இருப்பதாகவும் தாங்கள் ஆசைப்பட்டால் அவர்களுடன் உல்லாசமாக இருக்கலாம் எனவும் கூறி ஆசைக்காட்டியுள்ளார்.

அவருடன் சென்ற பிரேம்குமார் அந்த காட்டேஜுக்குள் நுழைந்ததும் போலீஸுக்குத் தகவல் சொல்லியுள்ளார். இதையடுத்து அங்கு விரைந்த போலிசார் மோகன்ராஜாவை கைது செய்து அங்கு இருந்த வட இந்திய பெண்களை மீட்டனர்.

மோகன்ராஜா கைதானதை அறிந்த அவரது கூட்டாளிகள் தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து மீட்கப்பட்ட 6 வடமாநில இளம்பெண்கள் திண்டுக்கல் மாவட்ட மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட மோகன் ராஜா சிறையில் அடைக்கப்பட்டார். தப்பிச் சென்ற ஸ்டீபன் மற்றும் சுரேஷ் ஆகியோரைப் போலிஸார் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News