உள்ளதும் போச்சா? விடாமுயற்சியை நம்பி இப்படி ஒரு பிளானா? லைக்காவுக்கு வந்த பெரிய நெருக்கடி

விடாமுயற்சியால் வந்த சோதனை: கடந்த 6ம் தேதி மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார். இவர்களுடன் இணைந்து ஆரவ், அர்ஜுன், ரெஜினா போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். படத்தின் கதை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. எப்போதும் போல இருக்கும் அஜித் படம் மாதிரி இல்லாமல் முழுக்க முழுக்க வித்தியாசமான ஒரு அனுபவத்தை இந்த படம் தந்தது.
கண்டண்டுக்கு மதிப்பு இல்லை: அதனால் அஜித்தை மாஸ் ஹீரோவாக பார்க்க நினைத்து கடைசியில் ஏமாந்து போனார்கள் ரசிகர்கள். இருந்தாலும் ஒரு நல்ல கதையை உள்ளடக்கிய திரைப்படமாக விடாமுயற்சி திரைப்படம் அமைந்தது. இதுவரை அஜித் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இந்த படத்தில் தான் கண்டன்ட் ஒரியண்டட் கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தில் கூட அவருடைய அமைதி, ஆக்சன் என மக்களை வெகுவாக ஈர்த்தது.
லைக்காவுக்கு விழுந்த பெரிய அடி: ஆனால் இந்த படத்தில் முதல் பாதி முழுவதுமாக வில்லன்களிடம் அடிவாங்கும் மாதிரியாக அஜித் நடித்திருப்பார். இதுதான் அந்த படத்திற்கு பெரிய பிளஸ் ஆக மாறியது. இந்த நிலையில் வசூலிலும் படம் மண்ணை கவ்வியது. இதுவே லைக்கா நிறுவனத்திற்கு ஒரு பெரிய அடியாகவும் இருந்தது .விடாமுயற்சி திரைப்படத்தை நம்பி மலையாளத்தில் லூசிபர் 2 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருந்தது.
மொத்த பட்ஜெட்: ஏற்கனவே அதனுடைய படப்பிடிப்பு நடந்து கொண்டுதான் இருக்கின்றது .இருந்தாலும் லூசிபர் 2 திரைப்படத்தின் பட்ஜெட் 175 கோடியாம் .விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி எப்படியும் வசூலில் பெரும் சாதனை படைக்கும். அதில் வரும் தொகையை வைத்து லூசிபர் 2 படத்தின் மீதி படத்தை எடுத்து விடலாம் என்ற முடிவில் தான் லைக்கா நிறுவனம் இருந்திருக்கிறது.
ஆனால் நிலைமை நினைத்ததை விட மோசமானது தான் மிச்சம். இந்த நிலையில் 100 கோடியை எப்படியோ ஏற்பாடு செய்து படத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் லைக்கா நிறுவனத்தினர் .மீதி 75 கோடிக்கு வழி தெரியாமல் முழித்துக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் லூசிபர் 2 படத்தை பிரிதிவிராஜ் இயக்க மோகன் லால் அந்த படத்தில் நடித்து வருகிறார்.
இதில் மோகன் லாலின் சம்பளம் 15 கோடி ,பிரித்திவிராஜன் சம்பளம் 10 கோடி. அதனால் படத்தின் நிலைமையை அறிந்து பிரித்திவிராஜும் மோகன்லாலும் தனது சம்பளத்தை தற்போதைக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறார்களாம். படம் வெளியானதும் கிடைக்கிற லாபத்தை பார்த்து சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.