சவால் விட்ட வெற்றிமாறன்!.. அரசனில் அனிருத்துக்கு பதில் லிடியன் நாதஸ்வரம்?...
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் திரைப்படத்திற்கு அனிருத் இசை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த படம் தொடர்பாக முதலான வெளியான முதல் கிளிம்ப்ஸ் வீடியோவிற்கு அனிருத் இசையமைத்திருந்தார். கடந்த பல மாதங்களாகவே படப்பிடிப்பு நடந்த நிலையில் தீபாவளியன்று இந்த படம் தொடர்பாக ஒரு புரமோஷன் வீடியோ வெளியானது.
ஆனால் அதற்கு அனிருத் இசையமைக்கவில்லை. ஏனெனில் அனிருத் தனது திருமண வேலையில் இருந்தார். கடந்த அக்டோபர் மாதம் முதலே அனிருத் எந்த படத்திற்கும் இசையமைக்கவில்லை என சொல்லப்படுகிறது. அதோடு, 2027 ஜனவரி மாதம் வரை அவர் இசைப் பணிக்கு இடைவெளி விட்டிருப்பதாக சொல்லப்படுகிறது..
இது வெற்றிமாறனுக்கு கோபத்தை ஏற்படுத்தவே அரசன் படத்திற்கு வேறு ஒரு இசையமைப்பாளரை நியமிக்கலாம் என்கிற முடிவுக்கு அவர் வந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான் வெற்றிமாறன் தயாரிப்பில் இயக்குனர் பாலா இயக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கவிருக்கிறார்.

ஏற்கனவே நான்கு பாடலுக்கு அவர் இசையமைத்து கொடுத்து விட்டாராம். பாடல்களை கேட்டவர்கள் பிரமாதமாக இருக்கிறது என பாராட்டி வருகிறார்கள். இதைப் பார்க்கும்போது அரசன் படத்திலிருந்து அனிருத்தை தூக்கிவிட்டு லிடியன் நாதஸ்வரத்தை வெற்றிமாறன் இசையமைக்க வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
நடிகன் நாதஸ்வரம் ஒரு பியானோ இசைக்கலைஞர். சிறுவயதிலேயே இசை அறிஞராக பார்க்கப்பட்டவர். இவர் இசையமைப்பாளர் வர்சா சதீஷின் மகன் ஆவார். இரண்டு வயது முதலே இசைக்கருவிகளை வாசிக்க தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. லிடியன் நாதஸ்வரத்தை இன்னொரு அனிருத்தாக உருவாக்கி காட்டுகிறேன் என வெற்றிமாறன் சவால் விட்டிருக்கிறாராம்.
