Categories: Cinema News latest news throwback stories

12 வயசுலயே பாரதிராஜா படத்துக்கு பாடல் எழுதிய பிரபலம்! –  பெரிய திறமைசாலிதான்…

இயக்குனர்களின் இமையம் என அனைவராலும் அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழில் பல வகையான திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். அவர் படங்கள் இயக்கிய காலக்கட்டத்திலேயே சமூகத்திற்கு தேவையான முக்கிய கருத்துக்களை பேசக்கூடியவர் பாரதிராஜா.

அவர் இயக்கிய வேதம் புதிது திரைப்படத்தில் சமூகத்தில் நிலவும் சாதிய பாகுபாடுகள் குறித்து பல விஷயங்களை பேசி இருப்பார். அதே போல நிறைய படங்களில் பாரதிராஜாவின் சமூக பார்வையை பார்க்க முடியும். அவருடைய உதவியாளராக இருந்த பாக்கியராஜும் கூட அவருடைய திரைப்படங்களில் நிறைய சமூகத்திற்கு தேவையான விஷயங்களை பேசியுள்ளார்.

Bharathiraja

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போன்ற பெரும் பிரபலங்களை வளர்த்துவிட்டவர் பாரதிராஜா. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பாரதிராஜா நாடகங்களில் நடித்து வந்தார். அப்போதில் இருந்தே கங்கை அமரன் மற்றும் இளையராஜா இருவருமே அவருக்கு பழக்கம்.

அப்போதுதான் இளையராஜாவும் கங்கை அமரனும் நாடகங்களில் வாய்ப்புகளை தேடி அலைந்துக்கொண்டிருந்தனர். இதை பார்த்த பாரதிராஜா அவர் நடித்த நாடகத்தில் வாய்ப்பு வாங்கி தந்துள்ளார். அந்த சமயத்தில் கங்கை அமரனுக்கு வயது வெறும் 12தான் ஆனால் தனக்கு பாடல் ஆசிரியர் ஆவதற்கு ஆசை என கூறியுள்ளார்.

ஏதோ சின்ன பையன் ஆசைப்படுகிறான் என கூட வைத்து கொண்டார் பாரதிராஜா. அப்போது பாரதிராஜாவின் நாடக பாடலுக்கு வரிகள் எழுத வேண்டி இருந்தது. கங்கை அமரன் சின்ன பையன் என அவரிடம் அதை பற்றி கேட்காமலே இருந்தார் பாரதிராஜா.

இந்த நிலையில் ஒரு நாள் கங்கை அமரனே ஒரு பாடல் வரியை எழுதி பாரதிராஜாவிடம் தந்துள்ளார். அதை பார்த்த பாரதிராஜா இந்த வயசுலையே இவ்வளவு திறமையா இருக்கானே என தனது குழுவில் சேர்த்துக்கொண்டார். இதை அவர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: சினிமாவில் களமிறங்க தயாராகும் குட்டி விஜய் சேதுபதி… இந்த வயசுலயே இப்படி ஒரு ஆசையா?

Rajkumar
Published by
Rajkumar