×

Lyrics சும்மா அள்ளுது... தனுஷின் "ஜகமே தந்திரம்" ரகிட ரகிட சிங்கிள் ட்ராக் ரிலீஸ்!

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் என்ற படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து சென்ற மே 1ம் தேதி படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா ஊரடங்கினாள் ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றது. தற்ப்போது இந்த ரிலீஸ் தேதி தெரியவில்லை.

 

எனிமும் கொரோனா லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறப்பட்டவுடன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று ஜூன் 28ம் தேதி தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படக்குழுவினர் ஜகமே தந்திரம் படத்தின் ‘ரகிட ரகிட ரகிட’ என்ற முதல் சிங்கிள் ட்ராக் பாடலை சற்றுமுன் யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இப்பாடலை தனுஷ் மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து பாடியுள்ளனர். மேலும், விவேக், தனுஷ் , ரிச்சர்ட் ஹார்வி , அந்தோணி தாசன் உள்ளிட்டோர் இணைந்து எழுதியுள்ள இந்த பாடல் வரிகள் ரசிகரகளை ஈர்த்து வருகிறது. குறிப்பாக,  "அந்த நாலு பேர இதுவரைக்கும் பார்த்தில்ல நானும்... எனக்கு தேவைபட்ட  நேரம் அந்த பரதேசிய காணும்.. வாழுறன்... எதுவும் இல்லனாலும் ஆளுறன்" என்ற வரிகள் சும்மா அள்ளுது... இதோ அந்த முழு வீடியோ.

From around the web

Trending Videos

Tamilnadu News