×

சொந்த தொகுதியில் மக்களால் முற்றுகையிடப்பட்ட எம் பி ! காரை நிறுத்தாமல் தெறித்து ஓடிய சம்பவம் !

தேனி தொகுதியில் நடைபெற இருந்த எம் ஜி ஆர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த எம் பி ரவீந்தரநாத்தின் காரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தேனி தொகுதியில் நடைபெற இருந்த எம் ஜி ஆர் பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த எம் பி ரவீந்தரநாத்தின் காரை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மறைந்த முதல்வர் எம் ஜி ஆரின் 103 ஆவது பிறந்தநாள் அதிமுக அரசால் விமரிசையாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இதையடுத்து தேனி மாவட்டம் கம்பம் வ உ சி மைதானத்தில் நடக்க இருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த தேனி எம்பியும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்தரநாத் காரை மக்கள் முற்றுகையிட முயன்றனர்.

அவர் கார் வந்த போது கருப்புக் கொடி காட்டியும் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியும் அவர்கள் காரை முற்றுகையிட முயன்றனர். ஆனால் காரை நிறுத்தாமல் அவர் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.

From around the web

Trending Videos

Tamilnadu News