மாநாடு படத்தின் மாபெரும் வெற்றியானது அப்படத்தில் பணியாற்றிய அனைவர்க்கும் திருப்பு முனை அமைந்துள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு, சிம்பு ஆகியோரின் மார்க்கெட் மீண்டும் டாப் கியரில் பயணிக்க தொடங்கியுள்ளது.
அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அடுத்து யார் படத்தை தயாரிக்க உள்ளார் என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. சுரேஷ் காமாட்சி அடுத்ததாக நிவின் பாலி நடிக்கும் ஒரு தமிழ் படத்தை தயாரித்து வருகிறார்.
இதையும் படியுங்களேன் – வளர்ச்சினா இதுதான்டா வளர்ச்சி.! குக் வித கோமாளிக்கே இது பெருமிதம்.!
இந்த படத்தை இயக்குனர் ராம் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஏ.ஆர்.ரகுமானின் ஷூட்டிங் ஷெட்டில் பிரமாண்டமாக ஒரு ரயில் செட்டப் போடப்பட்டு அதில் பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதற்காக அதிக அளவிலான லைட்டிங்கும் செலவு செய்யப்பட்டுள்ளதாம்.
இவ்வளவு செலவு செய்கிறீர்களே அந்த அளவுக்கு நிவின் பாலிக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறதா என சினிமா வட்டாரங்கள் கேள்வி எழுப்பி வருகின்றன. மலையாளத்தில் அவர் முன்னனி ஹீரோ தான் ஆனால், தமிழில் அவர் வளர்ந்து வரும் ஹீரோ தான்.
என்ன இருந்தாலும் இயக்குனர் ராம் திரைப்படம். கதைக்களம் கண்டிப்பாக பேசும்படி அமைந்திருக்கும் அதனால், நம்பி செலவு செய்யலாம் என மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி களமிறங்கிவிட்டார் போலும்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…