×

மாநாடு படப்பிடிப்பு ஓவர்... கதறும் சிம்பு ரசிகர்கள்...தெறிக்கும் புகைப்படங்கள்.... 

 
maanaadu

சுரேஷ் காமாட்சி தயாரிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க கடந்த வருடம் துவக்கத்திலேயே தொடங்கப்பட்ட திரைப்படம் மாநாடு. இப்படத்திற்காக வார இறுதியிலும் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் கூற, சிம்பு அதை ஏற்க மறுக்க பஞ்சாயத்து துவங்கியது. ஊட்டியில் படப்பிடிப்பை நடத்தி திட்டமிட்டிருந்தனர். ஆனால், படப்பிடிப்புக்கு செல்ல சிம்பு மறுத்ததால் பிரச்சனை எழுந்தது. அதன்பின் ஒருவழியாக பிரச்சனை தீர்க்கப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது.

maanaadu

சிம்பு அப்போது வெயிட் போட்டு குண்டாக இருந்தார். ஒரு பாடல் காட்சி மட்டும் படம்பிடிக்கப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியதும் படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சில மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறவில்லை. அதன் பின் சிம்பு உடலை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்துவிட்டு மாநாடு படத்திற்கு சென்றார். அவருக்காக படக்குழு காத்திருந்தது. புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்றது. 

simbu

90 சதவீதம் முடிந்த நிலையில், மீண்டும் படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டது. சமீபத்தில் கொரோனா பரவல் குறைந்து படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. எனவே, படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு துவங்கியது. ஒசூரில் உள்ள விமான நிலையத்தில் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சி படம்பிடிக்கப்பட்டது. தற்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, சிம்பு, வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

maanaadu

மேலும், இப்படத்தில் பணிபுரிந்த தொழில் நுட்ப கலைஞர்கள் சமூக வலைத்தளங்களில் மாநாடு படம் முடிந்துவிட்டதாக கூறி இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், சிம்பு ரசிகர்களும் #SilambarasanTR மற்றும் #MaanaaduWrap ஆகிய ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

maanaadu

இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 

maanaadu

From around the web

Trending Videos

Tamilnadu News