×

சொன்னதை செய்த சிம்பு... மாநாடு படக்குழுவுடன் அவர் செஞ்ச காரியத்தை பாருங்க....

 
சொன்னதை செய்த சிம்பு... மாநாடு படக்குழுவுடன் அவர் செஞ்ச காரியத்தை பாருங்க....

நடிகர் விவேக் சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சமீபத்தில் மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மட்டுமின்றி ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

simbu

இந்நிலையில், விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மாநாடு படக்குழு மரங்களை நட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட்பிரபு இயக்க, சிம்பு உள்ளிட்ட பலரும் நடித்து வரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுவென நடைபெற்று வருகிறது.

இந்த படப்பிடிப்பு தளத்தில்தான் சிம்பு, பிரேம்ஜி, சுரேஷ் கமாட்சி உள்ளிட்ட பலரும் மரங்களை நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

simbu

விவேக் மறைந்த போது இரங்கல் அறிக்கை வெளியிட்ட சிம்பு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாம் அனைவரும் மரம் நடுவோம். இதை நானே முன்னெடுப்பேன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News