Categories: Cinema News latest news

ரஜினியை அடிச்சு தூக்கிய சிம்பு!… யுடியூப்பில் ‘மாநாடு’டிரெய்லர் செய்த சாதனை….

நடிகர் சிம்பு முன்பு எப்படி இருந்தாரோ அதற்கு நேர் எதிராக தற்போது மாறியுள்ளார். உடல் எடையை பாதியாக குறைத்து அழகாக மாறியுள்ளார். மேலும், ஒழுங்காக படப்பிடிப்புக்கு சென்று நடித்துக்கொடுத்து விடுகிறார்.

அப்படி அவர் நடித்த திரைப்படம்தான் மாநாடு. வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா பிரேம்ஜி, உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோ கடந்த 2ம் தேதி வெளியானது. Time loop எனப்படும் முறையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

Maanaadu trailer

எனவே, ஏற்கனவே இப்படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்த நிலையில், டிரெய்லரும் வித்தியாசமாக இருந்ததால் டிரெய்லர் வெளியாகி நான்கே நாட்களில் இந்த டிரெய்லர் வீடியோ 10 மில்லியன் (1 கோடி) பார்வையாளர்களை பெற்றுள்ளது.

அப்படத்தில் ‘வந்தா சுட்டான் ரிப்பீட்டு’என எஸ்.ஜே. சூர்யா பேசும் ஒரு வசனம் வரும். அதுபோல ‘தினமும் வரேன்..ட்ரெய்லர் பாக்குறேன்.. ரிப்பீட்டு’ என சிம்பு ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.


அதேநேரம், சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் தொடக்க பாடல் கடந்த 4ம் தேதி யுடியூப்பில் வெளியானது. ஆனால், இப்பாடல் சரியான வரவேற்பை பெறவில்லை. இந்த வீடியோ வெளியாகி 4 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இன்னும் 6 மில்லியன் வியூஸ்களை கூட பெறவில்லை. அதோடு, தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் மாநாடு படமும் மோதுகிறது.

சூப்பர்ஸ்டாரை லிட்டில் சூப்பர்ஸ்டார் பீட் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
சிவா