×

பாபநாசம்லாம் படமா... போடானு சொல்லியிருக்கணும்... கமலை விமர்சனம் செய்யும் மாரி செல்வராஜ்

இயக்குனர் மாரி செல்வராஜ் நடிகர் கமல்ஹாசனை குறித்து விமர்சித்து இருக்கும் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. 
 

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ் நடிகர் கமல்ஹாசனின் பாபநாசம் படத்தின் கதைக்கருவைக் கடுமையாக விமர்சித்துப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் பேசுகையில், ``பாபநாசம்னு ஒரு படம் ஹிட்டாச்சு. அது நம்ம தமிழ்ச் சமூகத்துல செம ஹிட்டடிச்சுச்சு. அந்தப் படத்துல வர்ற அப்பா அந்தப் பொண்ணுகிட்ட, `உன்னை வீடியோ எடுத்ததால, அந்தப் பையன்தான் வெட்கப்படணும். பயப்படணும். அவன்தாண்டி அச்சப்படணும். நீ எதுக்குடி பதற்றமடைஞ்ச?’ இப்டி எந்த இடத்துலயுமே சொல்ல மாட்டாரு. அடுத்தவங்க படம் எடுத்தா என்னா பண்ணுவாருன்னு எனக்குத் தெரியல... காப்பாத்திட்டே இருப்பாரா? ஆனா அந்தப் படம்தான் நம்மூர்ல ஓடுச்சு. பெற்றோர்களின் அந்த அச்சம்தாம் நம்ம ஊர்ல முதலீடு. 


 

அவ்ளோ பெரிய ஹீரோ கமல்ஹாசனே, போலீஸ்கிட்ட எப்படிப் பேசணும்னு நடிக்க சொல்லிக்கொடுப்பாரு பொண்ணுகிட்ட. எவனாவது ஒருத்தன் வீடியோ எடுத்தான்னா... போடா மயிருன்னு சொல்லிட்டுப் போய்க்கிட்டே இருன்னு எங்கயுமே சொல்லவே மாட்டாரு. அதான் இங்க நடந்துட்டு இருக்கு. பொள்ளாச்சி வழக்குல 250 பெண்கள் பாதிக்கப்பட்டிருக்காங்கன்னா... முதப் பொண்ணே போடான்னு சொல்லிட்டுப் போயிருந்தா இப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது’’ என்று பேசினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News