Connect with us

Cinema News

ரஜினிக்கு கொடுத்த BMW காரை விடுங்க!.. மாவீரன் நடிகை சொந்தமா உழைச்சு வாங்குன காரை பாருங்க!..

கோலிவுட் முழுக்க நடிகர் ரஜினிகாந்துக்கும் இயக்குநர் நெல்சனுக்கும் ஜெயிலர் படம் பெற்றுத்தந்த வசூல் வேட்டைக்காக இதுவரை இல்லாத அளவுக்கு சன் பிக்சர்ஸ் புதுசா செக், BMW கார் எல்லாம் பரிசாக வழங்கியது பற்றித்தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதை அப்படியே விட்டு விட்டு கஷ்டப்பட்டு சம்பாதித்து சொந்தமாக முதன்முறை புதிதாக கார் வாங்கிய பிரபலத்தை பற்றித்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

இதையும் படிங்க: பாத்ரூமில் பப்பி ஷேமாக நிற்கும் தனுஷ் பட நடிகை!.. பார்த்தாலே சும்மா கிறுகிறுன்னு வருதே!..

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்த குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா பிளெஸ்ஸி புதுசா கார் வாங்கிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டு மாஸ் காட்டி உள்ளார்.

டான் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கிக்கு சிவகார்த்திகேயன் சான்ஸ் கொடுத்ததை போல மாவீரன் படத்தில் குக் வித் கோமாளி பிரபலம் மோனிஷா பிளெஸ்ஸிக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தார். ஆனால், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதிதி சங்கரை விட படத்தில் அசத்தலாக நடித்து ரசிகர்களை கவர்ந்து விட்டார் மோனிஷா பிளெஸ்ஸி.

இதையும் படிங்க: கிக் விமர்சனம்: கிக்குக்கு பதில் கிறுக்குன்னு வச்சிருக்கலாம்.. சந்தானம் இப்படி பிளேடு போட்டு சாகடிக்கலாமா?

இதற்கு முன்னதாக செகண்ட் ஹேண்டில் டப்பா வண்டி ஒன்றை அப்பா வாங்கி வைத்து இருந்ததை பலரும் கிண்டல் செய்ததாகவும், அடிக்கடி அந்த கார் நின்று விடும் தள்ளிட்டுத் தான் போவோம் என்று குறிப்பிட்ட அவர், அதன் பிறகு செகண்ட் ஹேண்டில் ஒரு நானோ கார் வாங்கினோம்.

அதையும் யாருமே காராக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, பலரும் கிண்டல் பண்ணிட்டே இருந்தாங்க.. மிடில் கிளாஸில் இருந்துக் கொண்டு கார் வாங்குவது என்பதே பெரிய விஷயம் தான். ஒரு வழியாக செப்டம்பர் 1ம் தேதி ஹுண்டாய் கார் வாங்கி விட்டேன் என முதல் ஆளாக அப்பாவை கார் ஓட்ட வைத்து அழகு பார்த்த வீடியோவை வெளியிட்டுள்ளார் மோனிஷா பிளெஸ்ஸி.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லின்க்கை கிளிக் செய்யவும்.

https://www.instagram.com/reel/CwsAaw5xF5g/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

 

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top