×

மடக்கி மடக்கி கேள்வி கேட்ட நெறியாளர் : எழுந்து சென்ற திரௌபதி இயக்குனர்

ஒரு இணையதளத்தில் பேட்டி கொடுத்த திரௌபதி இயக்குனர் மோகன் கோபத்தில் எழுந்த சம்பவம் நடந்துள்ளது.
 

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் இயக்குனர் ஜீ.மோகன் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் திரௌபதி. இப்படம் கடந்த வாரம் வெளியானது. ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டதால் அப்பிரிவின் ஆதரவும், மற்றவர்கள் இப்படத்தை கடுமையாகவும் எதிர்த்து வருகின்றனர்.

குறிப்பாக, குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்த பெண்களை குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த வாலிபர்கள் காதல் என்கிற பெயரில் ஏமாற்றி வாழ்க்கையை பாழ் செய்வதுவிடுகின்றனர் என்கிற கரு இப்படத்தில் கையாளப்பட்டுள்ளது. எனவே, சில சமூகத்தை சேர்ந்த பிரிவினர் இப்படத்தை ஆதரித்தும், சிலர் அதை எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அதேநேரம் பட ஊடகங்கள் இப்படத்திற்கு எதிரான விமர்சனங்களையே அளித்துள்ளது. இயக்குனர் மோகன் பேட்டி கொடுக்க செல்லும் இடமெல்லாம் கேள்விக்கனைகளை தாங்க முடியாமல் அவர் கோபப்பட்டு பேசுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், கலாட்டா இணையதளத்தில் மோகன் பேட்டி கொடுக்க சென்றார். அப்போது நெறியாளர் அவரை மடக்கி மடக்கி கேள்விகளை கேட்க ஒரு கட்டத்தில் கோபமடைந்த அவர் என்னை கேள்வி கேட்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை எனக்கூறி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News