Madhampatty Rangaraj: ஜாய் பிரச்னையை காலி செய்ய குக் வித் கோமாளியை பயன்படுத்தும் மாதம்பட்டி ரங்கராஜ்!
Madhampatty Rangaraj: விஜய் தொலைக்காட்சியின் முக்கிய நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய சர்ச்சைகளை உடைக்க குக் வித் கோமாளியை பயன்படுத்தி கொள்வதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பிரபல கேட்டரிங் நிறுவனத்தை வைத்திருக்கும் ரங்கராஜ் தன்னுடைய புகழை பயன்படுத்தி சமீபகாலமாக பிரபலங்களின் வீட்டு விஷேசத்துக்கு சமைத்து வருகிறார். இவருக்கும் வக்கீல் ஸ்ருதி பிரியாவுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிறிஸில்டா தன்னை மாதம்பட்டியின் மனைவி எனச் சொல்லி வந்தார். முதலில் அவர் மீது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். ரங்கராஜ் எதை பற்றியும் பேசாமல் இருந்து வந்தார். ஒருகட்டத்தில் ஸ்ருதி நான்தான் மாதம்பட்டியின் மனைவி என பதில் கொடுத்தார்.
இது ஜாய் கிறிஸில்டாவின் மீது மேலும் சர்ச்சையை கிளப்பியது. ஒருக்கட்டத்தில் சில மாதங்கள் முன் ஜாய் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நானும், மாதம்பட்டி ரங்கராஜும் திருமணம் செய்து கொண்டோம். 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் அதிர்ச்சி கொடுத்தார்.
விவாகரத்து இல்லாமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என கேள்விகளும் எழுந்தது. திடீரென தன்னுடைய இரண்டாவது மனைவியை பிரிந்து முதல் மனைவியுடன் மீண்டும் சேர்ந்து விஜய் தொலைக்காட்சியின் விருது விழாவில் கலந்துக்கொள்ள விஷயம் வெடித்தது.
தொடர்ந்து, அமைதியாக இருந்த ஜாய் கிறிஸில்டா என்னை இரண்டு வருடங்களுக்கு முன்னரே திருமணம் செய்து கொண்டார். நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். நான்கு அபார்ஷன் செய்து இப்போது என்னுடைய உடல்நிலை காரணமாக இந்த குழந்தையை சுமக்கிறேன் என பேட்டி கொடுத்து இருந்தார்.
அதிலும் ஜாய் கிறிஸில்டா தன்னுடம் இருந்த ரங்கராஜின் பொண்டாட்டி வீடியோவை வெளியிட்டார். ஆனால் குக் வித் கோமாளி பிரபலங்களான குரோஷி, உமைரை வைத்து காமெடி செய்து விஷயத்தை நீர்த்து போக செய்தார்.
மேலும், கடந்த வாரம் வாராமல் இருந்தவர். இந்த வாரம் நிகழ்ச்சிக்கு வந்து ஜாயை நக்கலடிக்கும் வகையில் குரோஷி, புகழை பேச வைத்து அதை மற்றவர்களை சிரிக்க விட்டு விஷயத்தை பெரிதுப்படுத்த விடாமல் நிகழ்ந்து கொள்வது பெண்கள் மத்தியில் கோபத்தை உருவாக்கி இருப்பதாக தெரிகிறது.
பொதுவாக விஜய் டிவியில் இப்படி சமூகத்தில் சர்ச்சையாக இருக்கும் பிரபலங்களை உள்ளே வைத்து இருப்பதை விரும்ப மாட்டார்கள். ஆனால் இன்னும் மாதம்பட்டி ரங்கராஜை வெளியில் அனுப்பாமல் வைத்து இருப்பது மேலும் சிக்கலை தான் இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு கொடுக்கும் என்பதே உண்மை.
