மகனின் முதல் பிறந்தநாள்... ஒன்றாக கொண்டாடிய மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான  மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்  ஜாய் கிரிஸில்டா ஆகியோர் தங்களது மகன்  ராகா ரங்கராஜின் முதல் பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடியுள்ளனர்.
 
madhampatty rangaraj

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான  மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர்  ஜாய் கிரிஸில்டா ஆகியோர் தங்களது மகன்  ராகா ரங்கராஜின் முதல் பிறந்தநாளை ஒன்றாக கொண்டாடியுள்ளனர். பல மாதங்களாக இவர்களது உறவு தொடர்பாக சர்ச்சைகளும் சட்டப் பிரச்சனைகளும் இருந்து வந்த நிலையில், தற்போது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருவரும் ஒன்றாக இருந்தது கவனம் பெற்றுள்ளது.

 மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மாதம்பட்டி ரங்கராஜ், சமையல் துறையிலும் பிரபலமானவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று ரசிகர்களிடம் அறிமுகமானார். ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவுடன் ரங்கராஜுக்கு ஏற்பட்ட உறவு கடந்த ஆண்டு பெரும் பேசுபொருளானது. இருவரும் திருமணம் செய்துகொண்டதாக ஜாய் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். பின்னர் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக ரங்கராஜ் மீது ஜாய் புகார் அளித்தார். இந்த விவகாரம் மகளிர் ஆணையம் மற்றும் நீதிமன்றம் வரை சென்றது. ரங்கராஜ் தரப்பில் ஜாய் முன்வைத்த சில குற்றச்சாட்டுகள் மறுக்கப்பட்டதால், இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சனை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியது. 

madhampatty rangaraj

இதற்கிடையே கடந்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி ஜாய் கிரிஸில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என பெயரிடப்பட்டது. குழந்தையின் தந்தை யார் என்பது தொடர்பான விவகாரமும் நீதிமன்றத்திற்குச் சென்ற நிலையில், டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் மாதம்பட்டி ரங்கராஜ்தான் குழந்தையின் உயிரியல் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டது.  அதன் பின்னர் தனது மகனுக்கான பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட ரங்கராஜ், ராகாவின் நலன், மகிழ்ச்சி மற்றும் எதிர்காலத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஒரு தந்தையாக துணை நிற்பேன் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.   இதையடுத்து ரங்கராஜ் - ஜாய் இடையேயான சூழலும் மாறத் தொடங்கியது. சமீபத்தில் மகன் ராகாவுக்கு கோயிலில் மொட்டை அடிக்கும் நிகழ்ச்சியில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகின. குழந்தையை தனது மடியில் வைத்துக்கொண்டு ரங்கராஜ் அந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தார். ஜாய் மற்றும் குழந்தையுடன் அவர் எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.  

madhampatty rangaraj

இந்நிலையில் தற்போது  ராகா ரங்கராஜின் முதல் பிறந்தநாளையும் மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிஸில்டா ஒன்றாக கொண்டாடியுள்ளனர். ஒரு காலத்தில் புகார், நீதிமன்ற வழக்கு, டி.என்.ஏ பரிசோதனை என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த இருவரும், தற்போது ஒன்றிணைந்து குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Tags

From Around the web