மரண மாஸ் காட்டுறாரே மாதம்பட்டி ரங்கராஜ்!.. 2 பொண்டாட்டி சர்ச்சைக்கு நடுவே செம கெத்து!
சமீப காலமாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் க்ரிசில்டா இடையே ஏற்பட்ட வழக்குகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், முக்கியமான திருப்பமாக ரங்கராஜ் ஜாய் க்ரிசில்டாவை தனது இரண்டாவது மனைவியாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் க்ரிஸில்டாவுக்கு பிறந்த குழந்தை தனது குழந்தை இல்லை என்று சொன்ன நிலையில், அவர் மீது எழுந்த டிஎன்ஏ சர்ச்சை வழக்கில், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையின் முடிவுகள் பின்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதனிடையே, ஜாய் க்ரிசில்டா தனது மீது குற்றச்சாட்டுகளை வெளியிடுவதைத் தடுக்க ரங்கராஜ் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்தது. இதனால் இந்த விவகாரம் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தில் நீடித்து வருகிறது.
இந்த சர்ச்சையின் பின்னணி 2025ஆம் ஆண்டில் தொடங்கியது. ஜாய் க்ரிசில்டா, ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்ட பின்னர் ஏமாற்றி விட்டுச் சென்றதாக குற்றம்சாட்டினார். இதனைத் தொடர்ந்து போலீஸ் புகார், மகளிர் ஆணையத்தில் மனு, நீதிமன்ற விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் வழக்கு முன்னேறியது. மேலும், அவர் மாதத்திற்கு சுமார் ₹6.5 லட்சம் பராமரிப்பு தொகை கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இத்தனை சர்ச்சைகள் நடந்து கொண்டிருந்தாலும், ரங்கராஜ் தனது மீடியா மற்றும் தொலைக்காட்சி பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார். குறிப்பாக, ஏப்ரல் 4 முதல் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில் அவர் மீண்டும் ஜட்ஜாக பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து போட்டியாளர்கள் மாதம்பட்டி ரங்கராஜை ட்ரோல் செய்வது போல காமெடி செய்து வருகின்றனர்.
மேலும், இரண்டு மனைவிகள் இருப்பதை ஒப்புக்கொண்டதாக கூறப்படும் இந்த சூழ்நிலையில், ரங்கராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளன. கையில் இளநீர் உடன் செம ஸ்டைலாக மாஸாக கெத்தாக போஸ் கொடுத்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். 2 மனைவி வைத்துக் கொண்டு இருக்கும் ஆணழகன் என்று அவரது ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
