Categories: Cinema News latest news

என் பாட்டுனாலதான் இன்ஸ்டா வளர்ச்சி பெற்றதா…? சொல்கிறார் பிரபல பாடலாசிரியர்..

பிரபல பாடலாசிரியர் வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான மதன்கார்கி இவர் தற்போது கதையாசிரியராக உருவெடுத்துள்ளார். பாகுபாலி படத்திற்காக வசனம் எழுதியவர் மதன்கார்கி. இவர் அண்மையில் வெற்றிநடை போடும் ஆர்ஆர்ஆர் படத்திற்கும் வசனம் எழுதியவர் இவரே.

கண்டேன் காதலை படத்தில் ஆரம்பத்த இவரது பயணம் ஆர்ஆர்ஆர் படம் வரை வெற்றி நடை போட்டு வருகிறது. எந்திரன் படத்தின் இரும்பிலே பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுபோல் ஐ படத்தில் இவர் எழுதிய ஐல ஐலா பாடலும் ரசிகர்கள் மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. கத்தி படத்தில் செஃபி புள்ள பாடலும் இவர் எழுதியது. அதில் ஒரு வரியில் இன்ஸ்டா கிராமத்துல சேர்ந்து வாழலாம் என எழுதியிருப்பார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில் அந்த வரியை குறிப்பிட்டு சொல்லியிருப்பார். அந்த நேரத்தில் இந்தியாவில் இன்ஸ்டா வளர்ச்சி பெறவில்லை. பாட்டில் குறிப்பிட்டது போல் எல்லாரும் இன்ஸ்டாவைத்தான் பயன்படித்திக் கொண்டிருக்கிறொம் என பெருமிதத்தோடு கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini