GDN Box Office : 2 நாட்களில் ஜிடிஎன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Aug 9, 2026, 08:02 IST
2 நாட்களில் 'ஜிடிஎன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. இந்தியாவின் எடிசன் என அழைக்கப்படும் ஜி.டி.நாயுடுவின் பயோபிக் எடுத்திருக்கிறார்கள்.
'ஜி.டி.என்' (G.D.N) என்று டைட்டில் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் மாதவன் தான் ஜி.டி.நாயுடுவாக வலம் வந்துள்ளார். இதை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியிருக்கிறார்.
இதில் சத்யராஜ், துஷாரா விஜயன், ஜெயராம், வினய், பிரியாமணி, கருணாகரன், அதிதி பாலன், மோகன் ராமன் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளார்கள்.
இப்படம் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 7-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது. பாக்ஸ் ஆபிஸில் கடந்த 2 நாட்களில் உலக அளவில் ரூ.1.63 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.