GDN Box Office : 3 நாட்களில் ஜிடிஎன் செய்த வசூல் இவ்ளோ தானா?
Aug 10, 2026, 06:15 IST
3 நாட்களில் 'ஜிடிஎன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'ஃபைவ் ஸ்டார்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிருஷ்ணகுமார் ராமகுமார்.
அதன் பிறகு பல படங்களில் நடித்த இவர் 'ஓஹோ எந்தன் பேபி' என்ற படத்தை இயக்கியிருந்தார். இதையடுத்து இவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் புது படம் தான் 'ஜி.டி.என்' (G.D.N).
ஜி.டி.நாயுடுவின் பயோபிக்கான இப்படத்தில் கதாநாயகனாக மாதவன் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.
கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி உலகமெங்கும் வெளிவந்த இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருகிறது. பாக்ஸ் ஆபிஸிலும் கடந்த 3 நாட்களில் உலக அளவில் ரூ.3.01 கோடி மட்டுமே கல்லா கட்டியிருப்பதாக சொல்லப்படுகிறது.