GDN Box Office : 4வது நாளில் வெறும் 52 லட்சம் வசூலித்த ஜிடிஎன்!

 
GDN

4 நாட்களில் 'ஜிடிஎன்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. 'துரந்தர்' படத்தின் வெற்றிக்கு பிறகு மாதவன் நடித்துள்ள புதிய படம் தான் 'ஜி.டி.என்' (G.D.N).

ஜி.டி.நாயுடுவின் பயோபிக்கான இதை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். இதில் மாதவனுடன் இணைந்து துஷாரா விஜயன், பிரியாமணி, ஜெயராம், சத்யராஜ், ஷீலா ராஜ்குமார், விஜய் யேசுதாஸ், நந்து, கனிகா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இப்படம் கடந்த வாரம் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது.

பயோபிக் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படமோ அதை பூர்த்தி செய்யவில்லை. வசூல் ரீதியாகவும் 4 நாட்களில் உலக அளவில் ரூ.3.53 கோடி மட்டுமே கல்லா கட்டியிருக்கிறது.

From Around the web