என் மகனை விட திறமையானவர்கள் நிறைய பேர் இருக்காங்க!.. செம ஃபிராங்காக பேசிய மாதவன்!..

 
gdn

ஜிடிஎன் படத்தின் ப்ரோமோசனில் ஈடுப்பட்டிருக்கும் நடிகர் மாதவனை இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் நேர்காணல் செய்தபோது, தனது சினிமா பயணம், அரசியல், குடும்பம் மற்றும் மகன் வேதாந்த் குறித்து பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அப்போது பேசிய மாதவன், நான் தொடர்ந்து பயோபிக் படங்களில் நடிக்கவில்லை. 'ராக்கெட்ரி' படத்திற்குப் பிறகு 'லெகசி' என்ற வெப் சீரிஸிலும், 'சர்க்கிள்' என்ற படத்திலும் நடித்துள்ளேன். ஆனால் அவை இன்னும் வெளியாகவில்லை. 'ஜிடிஎன்' வெளியாகும்போது அதனால் தொடர்ந்து பயோபிக் படங்களில் நடிப்பது போல தோன்றலாம்.

மேலும், தற்போதைய அரசியல் சூழலில் நல்லது செய்தாலும் விமர்சனம் வரும்; தவறு செய்தாலும் விமர்சனம் வரும். எதைச் செய்தாலும் அதை குறை சொல்ல ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். எனக்கு அரசியலுக்கு வரும் ஆசையே இல்லை. சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இல்லை. சிறுவயதிலிருந்தே அரசியல் பற்றிய புரிதல் எனக்கு இல்லை. ஆனால் அரசியல் பின்னணியில் ஆழமான ஆய்வுடன் ஒரு நல்ல கதை வந்தால், அந்தப் படத்தில் கண்டிப்பாக நடிப்பேன்" என்று தெரிவித்தார்.

இந்தத் துறைக்கு வந்து 25 ஆண்டுகளாகிறது. இதுவரை யாரைப் பற்றியும் தவறாக பேசியதில்லை. வாழ்க்கையில் நான் பெரிதாக கஷ்டப்பட்டதில்லை. எந்த தயாரிப்பாளரிடமும் வாய்ப்பு கேட்டு சென்றதில்லை. 

தன் மனைவியை பற்றி பேசிய அவர், நீங்கள் உங்கள் பெற்றோருடன் 20 ஆண்டுகள் மட்டுமே இருந்திருக்கிறீர்கள். ஆனால் என்னுடன் 26 ஆண்டுகளாக வாழ்கிறீர்கள். அதனால் உங்களைப் பற்றி அவர்களை விட எனக்குத்தான் அதிகம் தெரியும் என்று என் மனைவி அடிக்கடி கூறுவார்" என சிரித்தபடி பகிர்ந்துகொண்டார்.

மகன் வேதாந்த், சர்வதேச அளவிலான நீச்சல் வீரராக இருந்தாலும், அவரைவிட சிறப்பாக நீந்தும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர் என் மகன் என்பதால் அனைவருக்கும் தெரிகிறார். இவ்வளவு சிறிய வயதிலேயே கிடைத்திருக்கும் இந்தப் பிரபலத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள், எப்போதும் அடக்கத்துடன் இரு என்று நான் அவரிடம் அறிவுறுத்தியுள்ளேன் என்றார். மாதவனின் இந்த வெளிப்படையான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

Tags

From Around the web