×

அசிங்கப்படுத்திய ரசிகருக்கு மாதவன் அளித்த சூப்பர் பதில்... இதான் நம்ம மேடி

மாதவன் தனது ரசிகருக்கு அளித்த பதிலால் ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். 
 

மலையாள திரையுலகில் வெளியான படம் சார்லி. துல்கர் சல்மான் மற்றும் பார்வதி மேனன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை மார்டின் ப்ராகாட் இயக்கியிருந்தார். இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. 5 வருடத்திற்கு பிறகு இப்படத்தினை தமிழில் ரீமேக் செய்திருக்கிறார்கள்.

பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு மாறா எனப் பெயரிடப்பட்டு இருக்கிறது. விளம்பரப் பட இயக்குனர் திலீப் குமார் இயக்கி இருக்கிறார். துல்கர் வேடத்தில் மாதவனும், பார்வதி வேடத்தை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் ஏற்று இருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்து இருக்கிறார். கொரோனா சிக்கலால் படம் அமேசான் தளத்தில் ஜனவரி 8ந் தேதி வெளியிடப்பட்டது. 

படத்திற்கு ஏறத்தாழ நல்ல விமர்சனங்கள் வந்தது. தொடர்ந்து, சில நெகடிவ் விமர்சனங்களும் வருகிறது. இதில் ஒரு குறிப்பிட்ட ட்வீட்டிற்கு மாதவன் தன்மையாக பதில் அளித்து இருக்கிறார். அந்த ட்வீட்டில், சார்லி படத்தை பார்த்தவர்களுக்கு இது படுசுமாரான படம். 30 நிமிடத்திற்கு பின்னர் படத்தை பார்ப்பது வேதனையாக இருக்கிறது. மாதவன் தான் இப்படத்தை கெடுத்திருக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்கு பதிலளித்த மாதவன் அச்சோ, உங்களுக்கு பிடிக்காமல் போனதற்கு மன்னிச்சிடுங்க பிரதர். அடுத்த முறை சரியாக செய்ய முயற்சிக்கிறேன் எனப் பதில் அளித்திருக்கிறார். இந்த ட்வீட்டை பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து இருக்கிறார்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News