Categories: Cinema News latest news throwback stories

ஏடாகூடமாய் பேசி அந்த நடிகையிடம் கும்மாங்குத்து வாங்கிய மாதவன்… பல் உடைந்தது தான் மிச்சம்..

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன், நடிகை ரித்திகா சிங் ஆகியோர் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “இறுதிச்சுற்று”. குத்துசன்டையை மையமாக வைத்து அதிரடியாக உருவான இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட் அடித்தது.

படத்தில் வரும் ஒவ்வொரு பாக்சிங் கட்சிகளும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது என்றே கூறலாம். பார்ப்பவர்களுக்கு ரியலாக இருக்கவேண்டும் என்பதால், சில காட்சிகள் உண்மையாகவே எடுக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் மாதவன் ஒரு நேர்காணலில், கலந்து கொண்டு இறுதிசுற்று படம் குறித்து பேசிக்கொண்டிருந்தார். அந்த நேர்காணலை நடிகை குஷ்பூ தான் தொகுத்து வழங்கியிருந்தார்.

அப்போது மாதவனிடம் குஷ்பு ” படத்தில் ரித்திகா சிங் உங்களை உண்மையாகவே வாயில் குத்தியதால் உங்கள் பல் உள்ளே சென்று விட்டதாமே..? என கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த மாதவன் “உங்களுக்கு அதுவும் தெரிந்துவிட்டதா..? என முதலில் ஷாக்கானார்.

இதையும் படியுங்களேன்- எனக்கு கல்யாணம் எல்லாம் முடிந்தது… ரசிகர்களை பதற வைத்த ஹன்சிகா… பின்னணி ரகசியம் இதோ…

அதற்கு பிறகு விளக்கம் கொடுத்த அவர் ” அது என்னுடைய தப்பு..ஏனென்றால், அந்த காட்சி உண்மையாக இருக்கவேண்டும் என்பதற்காக ரித்திகாவிடம் நல்லா அடிங்க பரவாயில்லை என்று சொன்னேன். அதுக்கு அப்புறம் வச்சாங்க பாருங்க முஞ்சில ஒன்னு. என் பல்லு  உள்ளே சென்றுவிட்டது.  ட்ரைலரில் வரும் காட்சியில் கூட அது உங்களுக்கு தெளிவாக தெரியும்” என தெரிவித்துள்ளார்.

Manikandan
Published by
Manikandan