செல்லத்த தூக்குங்கடா... தங்க சேலையில் தகதகன்னு ஜொலிக்கும் மடோனா!
கேரள மாநிலம் கொச்சியை சொந்த ஊராக கொண்ட நடிகை மடோனா ஜெபஸ்டின் மலையாளத்தில் வெளிவந்த பிரமம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி முக்கிய ஹீரோயின் ஆக நடித்திருந்தார் .

இதில் மூன்றாவது ஹீரோயினாக மடோனா ஜெபஸ்டின் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பிரேமம் திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகையாக மடோனா ஜெபஸ்டின் பார்க்கப்பட்டார். அதை அடுத்து தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தார் தொடர்ந்து தமிழில் வெளிவந்த கவண் , பவர் பாண்டி, ஜூங்கா , வானம் கொட்டட்டும், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மடோனா நடிகை என்பதையும் தாண்டி மிக அழகாக பாடல் பாடுபவர். பல்வேறு விருது நிகழ்ச்சிகள் மற்றும் நேர்காணல்களில் மிகவும் அழகாக பாடல் பாடி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை மடோனா ஜெபஸ்டின் தற்போது சமூக வலைதளத்தில் தங்க நிறத்தில் தக தகன்னு ஜொலிக்கும் அழகான சேலையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த அவரது ரசிகர்கள் செல்லத்தை தூக்கிட்டு வாங்கப்பா என ரசித்து தள்ளி உள்ளனர்.
