Categories: Cinema News latest news

ரீல்ஸில் பிரச்னை செய்யும் மதுரை முத்து மனைவி… இரண்டாவது கல்யாணத்திலும் கோளாறா?

Madurai Muthu: காமெடி நடிகராக இருக்கும் மதுரை முத்துவின் கேரியர் சரியாக சென்று கொண்டு இருந்தாலும் அவரின் திருமண வாழ்க்கையில் மீண்டும் பிரச்னை புயலடிக்க தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மேடை காமெடிகள் களைகட்ட தொடங்கிய கூட்டத்தில் மதுரை முத்துவும் முக்கிய இடம் பிடித்தார். நிறைய ஈவெண்ட்டுகளில் கலந்துக்கொள்ளவும் செய்து வந்தார். விஜய் டிவியில் மட்டுமல்லாமல் சன் டிவி ஷோக்களிலும் கலந்துக்கொண்டு வருபவர் சில திரைப்படங்களிலும் நடித்து இருக்கிறார். கேரியர் சரியாக சென்று கொண்டு தான் இருக்கிறது.

இதையும் படிங்க: ஒத்த வெற்றிக்காக ஏங்கும் முன்னணி நடிகர்… தனிஒருவனை கொடுத்த மோகன்ராஜா… தட்டிவிட்டு மொக்கை வாங்குறாரே!..

ஆனால் இவர் இவெண்ட்களில் பிஸியாக இருந்த சமயத்தில் வெளிநாட்டில் இருக்கும் போது இவருக்கு உடல்நல பிரச்னை ஏற்பட்டதாம். கணவருடன் அருகில் இல்லை என்ற போதும் அவருக்காக வேண்டிக்கொண்டு கோயில் சென்றார் முதல் மனைவி. அப்போது ஏற்பட்ட கார் விபத்தில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இரண்டு பெண் குழந்தைகள் இருந்த போது அவர்களை வளர்க்க வேண்டும் என்பதற்காக மதுரை முத்து, முதல் மனைவியின் தோழியும் டாக்டருமான ரீத்து என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து சில வருடங்கள் கடந்து இருக்கும் நிலையில் இரண்டாம் மனைவி ரீத்து சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கிறார். அடிக்கடி ரீல்ஸ் வீடியோ போடும் ரித்து சமீபகாலமாக சோகமாக வீடியோக்களை மட்டுமே போடுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: ஏங்கடா! லட்டு மாதிரி அஜித்-விஜய் படங்கள் கிடைச்சா மிஸ் பண்ணுவேனா? ஷாக் கொடுத்த சாய் பல்லவி!..

Published by
Shamily