சம்பாதிச்சு என்ன பண்ணப் போறனு கேட்டாங்க.. செய்து காட்டிய மதுரை முத்து

by Rohini |
madhuraimuthu
X

விஜய்டிவி மூலம் பிரபலமான மதுரை முத்து:விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற தொடரில் போட்டியாளராக கலந்து கொண்டு அந்த தொடரின் டைட்டில் வின்னர் ஆகவும் மாறி மக்கள் மத்தியில் தனது ஸ்டாண்ட் அப் காமெடியால் நிலைத்து நின்றவர் மதுரை முத்து. அவருடைய ஸ்டாண்ட் அப் காமெடிக்கு என ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய காமெடியை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார் மதுரை முத்து.

என்றென்றும் புன்னகை:அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரிகளில் தனது ஸ்டாண்டப் காமெடியை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இந்த காமெடியால் கிடைத்த வரவேற்பு வெள்ளி திரையும் அவரை அழைத்துக் கொண்டது. ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார் மதுரை முத்து. தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து ரசிகர்களை குதுகலப்படுத்தி வருகிறார் .

ப்ராபர்ட்டி ஜோக்:ப்ராபெர்ட்டி காமெடி என்ற வகையில் தனது சின்ன சின்ன ப்ராப்பர்ட்டி மூலம் பல காமெடிகளை கூறி அரங்கத்தையே சிரிப்பலையாக்குபவர் மதுரை முத்து. பெரும்பாலும் ஒரு காமெடி நடிகனுக்கு பின்னாடி பல சோகமான சம்பவங்கள் ஒளிந்திருக்கும். அதை மறைத்து மற்றவர்களை சிரிக்க வைப்பதே குறிக்கோளாக வைத்திருப்பவர்கள் தான் காமெடியர்கள்.

அந்த வகையில் மதுரை முத்துவுக்கும் சோகமான சில சம்பவங்கள் நடந்தன. அவருடைய மனைவி உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நிலையில் மதுரை முத்து 2019 ஆம் ஆண்டு அவரால் முடிந்த சில நலத்திட்ட உதவிகளை செய்து கொண்டு வருகிறார். இன்று மதுரையில் ஒரு 150 பேருக்கு பொங்கல் தொகுப்பாக சேலை வேட்டி பொங்கல் சாமான் கொடுத்து அவர்களுக்கு உதவிகளை வழங்கியிருக்கிறார்.

இது பப்ளிசிட்டிக்காக இல்லை. தன்னுடைய மனதிருப்திக்காக என மதுரை முத்து கூறியிருக்கிறார். நிறைய பேர் வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று சம்பாதிச்சு என்னத்த பண்ணப் போற என கேட்டு இருக்கிறார்கள். இப்போது இந்த உதவிகளை செய்கிறேன். இன்னும் சில நாட்களில் ஒரு கோவில் கட்டி முடிக்க உள்ளேன். அந்த கோவில் திறப்பு விழாவில் இன்னும் ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகளை தன்னுடைய மக்களுக்கு செய்ய இருக்கிறேன். இதன் மூலம் மற்றவர்களும் இல்லாத ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ய முன்வருவார்கள் என்பதற்காக தான் இந்த அளவு நான் செய்து வருகிறேன் என மதுரை முத்து கூறியிருக்கிறார்.

Next Story