என் புருஷன்கிட்டேந்து என்ன பிரிச்சிட்டாங்க… கதறும் மதுரை முத்துவின் இரண்டாவது மனைவி

 
என் புருஷன்கிட்டேந்து என்ன பிரிச்சிட்டாங்க… கதறும் மதுரை முத்துவின் இரண்டாவது மனைவி

Madurai Muthu: தமிழ் காமெடி நடிகராக இருந்து வரும் மதுரை முத்துவுக்கும் இரண்டாம் மனைவி நீதுவுக்கும் பிரச்சனை வெடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

விஜய் டிவியின் கலக்க போவது யாரு, சன் டிவியின் அசத்த போவது யாரு நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் மதுரை முத்து. அவர் பிரபலமாக பிசியாக வலம் வந்த நேரத்தில் திடீரென முதல் மனைவி இறந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இரண்டு மகள்கள் இருக்க மனைவி இறப்பு அவர் குடும்பத்தையே உலுக்கியது. தொடர்ந்து சில மாதங்களிலேயே முதல் மனைவிக்கு கோயில் கட்டி ஆச்சரியப்படுத்தினார். அதை தொடர்ந்து அவருடைய இரண்டாவது திருமணமும் நடந்தது. 

மனைவியின் தோழியும் டாக்டருமான நீத்துவை திருமணம் செய்து கொண்டார். அவர் சமூக வலைத்தளங்களில் பிஸியாக வீடியோவும் வெளியிட்டு வந்தார். திருமணம் முடிந்து 10 வருடம் நெருங்கிவிட்ட நிலையில் இருவரும் பிரிந்துவிட்டதாக தகவல் கசிந்தது.

இந்நிலையில் நீத்து தன்னுடைய வீடியோவில் ஏற்கனவே குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது. அவரிடம் வாங்கி குடிப்பவர்கள் இல்லாதது பொல்லாததை சொல்லிவிட்டு என்னை பிரித்துவிட்டனர். மோசமாக பேசுகின்றனர். 

என் கணவர் கூட இத்தனை பிரச்சனையில் என்னை பற்றி அசிங்கமாக பேசியது இல்லை. ஆனால் இவர்கள் எல்லாம் என்னை பற்றி பேசுகின்றனர். அவர்கள் பேச்சால் இப்போ நானும் என் பிள்ளையும் நடுத்தெருவில் நிற்கிறோம் என அழுது கதறி வீடியோ போட்டு இருப்பது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

From Around the web