×

தமிழகத்தில் முதல் கொரோனா பலி – மதுரை நோயாளி உயிரிழப்பு !

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் தமிழகத்தில் முதன் முதலாக மதுரையைச் சேர்ந்த நோயாளி பலியாகியுள்ளார்.

 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் தமிழகத்தில் முதன் முதலாக மதுரையைச் சேர்ந்த நோயாளி பலியாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் மூலம் இதுவரை உலகளவில் 4,00,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலால் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,000 தாண்டியுள்ளது. இந்தியாவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐ நெருங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் 21 நாட்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தனர். இதுவரை கொரோனா வைரஸ் பலி எதுவும் ஏற்படாத நிலையில் நேற்றிரவு மதுரையில் சிகிச்சைப் பெற்று வந்த 54 வயது மதிக்கத்தக்க நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தன் டிவிட்டில் ‘சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கொரோனா வைரஸ் நோயாளி உயிரிழந்துள்ளார். அவருக்கு நீண்ட நாட்களாக நுரையீரல் பிரச்சனையும், நீரிழிவு நோயும் மற்றும் உயர் அழுத்த நோயும் இருந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News