×

23 ஆண்டுகளை கடந்த இளைய ’மேஸ்ட்ரோ’ – ரசிகர்கள் வாழ்த்துக்கு நன்றி !

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா தனது திரைப்பயணத்தில் 23 ஆண்டுகளைக் கடந்துள்ளார்.

 

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன் ஷங்கர் ராஜா தனது திரைப்பயணத்தில் 23 ஆண்டுகளைக் கடந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தன் இசையால் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கும் மேஸ்ட்ரோ இளையராஜாவின் இளையமகனான யுவன் ஷங்கர் ராஜா தனது சினிமா பயணத்தில் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். சரத்குமார் நடித்த அரவிந்தன் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள யுவனுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை சொல்ல அதற்கு ‘உங்கள் அன்பு தான் என்னை மேலே செல்ல ஊக்கமளித்தது’ எனத் தனது டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News