‘விடாமுயற்சி’ படத்தில் அந்த எலிமெண்ட் நிச்சயமாக இருக்கு.. மகிழ்திருமேனி வச்ச ட்விஸ்ட்
வரும் ஆனா வராது: விடாமுயற்சி படம் பொங்கலுக்கு வரவேண்டியது. வரும் ஆனா வராது என்பதை போல ரசிகர்களை சில நாள்கள் லைக்கா நிறுவனம் ஆட்டம் காண வைத்தது. கடைசியாக புது வருடப் பிறப்பில் கண்டிப்பாக விடாமுயற்சி படம் பொங்கல் ரேஸில் இருந்து தள்ளிப் போகிறது என அறிவித்து ஒட்டுமொத்தமாக ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது லைக்கா நிறுவனம். அதோடு அஜித்தும் தன்னுடைய ரேஸில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார்.
வெற்றிபெற்ற அஜித்: பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வரவில்லை என்றாலும் இந்த வருட பொங்கலை தல பொங்கலாகத்தான் அஜித் மாற்றினார். ஆமாம். துபாயில் நடந்த 24 ஹெச் கார் ரேஸ் பந்தயத்தில் அஜித்தின் அணி மூன்றாவது இடம் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தது. இது அஜித்துக்கும் ஒரு பெரிய கனவாக இருந்தது. இந்த வெற்றியை அஜித் ரசிகர்கள் உட்பட அனைவரும் சேர்ந்து கொண்டாடினார்கள்.
டிரெய்லர் வெளியீடு: மேலும் அதுவரை பேட்டியே கொடுக்காத அஜித் இந்த வெற்றிக்கு பிறகு பல பேட்டிகளை கொடுத்து வந்தார். அதனால் அஜித் ரசிகர்கள் கொஞ்சம் ஆசுவாசமடைந்தனர். படம் வராத குறையை அவருடைய ரேஸ் வெற்றி ஈடு செய்தது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாகும் என லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஏற்கனவே விடாமுயற்சி படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கூஸ் பம்பில் வைத்தது.
இதில் டிரெய்லரை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அதில் சவதீகா பாடல் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் ஒலிக்கும் பாடலாக மாறியிருக்கிறது. அனிருத் ஒரு தனிச் சிறப்பு மிக்க மனிதர் என்றும் அவருடன் வேலை செய்தது மிக்க மகிழ்ச்சி என்றும் அஜித்தின் தீவிர ரசிகர் அனிருத் என்றும் அதனால் அது சம்பந்தமான ஒரு எலிமெண்ட் படத்தில் இருக்கிறது என்றும் மகிழ்திருமேனி சமீபத்தில் கூறியிருக்கிறார்.
ஒரு ஃபேன் பாய் மூமெண்டாக அனிருத் இருக்கும் பட்சத்தில் படத்தில் கண்டிப்பாக மாஸ் எலிமெண்ட் இருக்கும். அது பிஜிஎம் ஆகவோ பின்னனி இசையாகவோ எதுவாக இருந்தாலும் அஜித்துக்கு என மெனக்கிட்டிருக்கிறார் அனிருத் என மகிழ்திருமேனி சொன்னதில் இருந்து தெரிகிறது.