"ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரெடி பண்ணுங்க!" அஞ்சலியை கலாய்த்த விஷால்...
நடிகர் விஷால் இயக்கி, கதாநாயகனாக நடித்துள்ள 'மகுடம்' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'மச்சிந்தி மச்சானே' பாடல் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனுடன், பாடல் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட கலகலப்பான பின்னணிக் காட்சிகள் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
'மகுடம்' திரைப்படம் விஷாலின் 35-வது படமாக மட்டுமல்லாமல், அவர் முதல் முறையாக இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படமாகவும் அமைந்துள்ளது. ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 99-வது படமான இது, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது.
First Night❌
— AmuthaBharathi (@CinemaWithAB) June 29, 2026
First Aid✅
Vishal - Anjali combo😂🔥pic.twitter.com/kj60803Ijc
இந்தப் படத்தில் விஷாலுடன் துஷாரா விஜயன், அஞ்சலி மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் டீஸர் ஏற்கனவே வெளியாகி, விஷாலின் மூன்று விதமான தோற்றங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'மகுடம்' திரைப்படம் ஜூலை மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அந்த வீடியோவில் "நானும் விஷாலும் ரொம்ப ரிஸ்கியான ஷாட் பண்ணிருக்கோம். அதுல எனக்கு கால்ல அடிபட்டுச்சு" என்று அஞ்சலி கூறுகிறார். உடனே நகைச்சுவையாக பதிலளித்த விஷால், "ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ரெடி பண்ணுங்க" என்று கலாய்க்க, அதற்கு சிரித்தபடியே "ஃபர்ஸ்ட் எய்டுன்னு சொல்லுங்க" என்று அஞ்சலி கூறியுள்ளார். இந்த ஜாலியான உரையாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
