தலைவன் தரமா செஞ்சிட்டாரு... மிரளவைக்கும் விஷாலின் மகுடம் டீசர்!

 
magudam teaser

நடிகர் விஷால் சமீப காலமாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் மார்க்கெட் இழந்து கொஞ்சம் காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். இதனால் விஷாலின் ரசிகர்கள் கொஞ்சம் அதிருப்தியில் இருந்தார்கள் .

ஆனால், தற்போது விஷாலின் மகுடம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரையும் குதூகலத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம் விஷாலை பழைய கோணத்தில் பார்ப்பது போலவே உள்ளது. விஷால் இந்த திரைப்படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார் .

இப்படத்தில் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்து வைத்து இருக்கிறது. மகுடம் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தில் துஷார விஜயன் அஞ்சலி உள்ளிட்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் .

இதில் அஞ்சலியின் ரோல் அழுத்தமான கதையை சொல்லும் என எதிர்பார்க்கலாம். காட்சிக்கு காட்சி ரத்த களம் ரணகளமாக இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார்கள். பார்ப்பதற்கு வெறித்தனமாகவும் இருக்கிறது. அதற்கு ஏற்றார் போல் ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பக்காவாக பொருந்துகிறது .

இதனால் விஷால் மீண்டும் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் என ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்தோடு இந்த படத்திற்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். துஷாரா விஜயன் மிகவும் சாஃப்டான கதாபாத்திரத்தில் நடிப்பது போல் தெரிகிறது.

ஸ்வீட் எடு கொண்டாடு என்ற தொணியில் அவரது காட்சி இதில் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. விஷாலின் மகுடம் திரைப்படம் அவருக்கு நிச்சய மகுடம் சூட்டும் என ரசிகர்கள் இப்போதே பாசிட்டிவான விமர்சனத்தை தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Tags

From Around the web