என்னோட ‘மகுடம்’ ரெடியாகிடுச்சு!.. ‘தி ஒன்’ சூர்யாவுக்கே சவால் விடும் விஷால்.. டைரக்ட் மோதல்!..
நடிகர் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அதே நாளில் நடிகர் விஷாலின் 'மகுடம்' திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகி நேரடியாக போட்டிக்கு தயாராகியுள்ளது. மேலும், 'மகுடம்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தப் படத்தை நடிகர் விஷால் இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். மேலும், அஞ்சலி, துஷாரா விஜயன், வம்சி கிருஷ்ணா, யோகி பாபு, அஜய், ஜான் விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சௌத்ரி, ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோர் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில், விஷால் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தவுள்ளார். ட்ரெய்லர் வெளியாகும் முன்பே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, 'மகுடம்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே நாளில் சூர்யா நடித்துள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படமும் வெளியாக இருப்பதால், பாக்ஸ் ஆபிஸில் இந்த இரண்டு படங்களும் நேருக்கு நேர் மோதவுள்ளன. இது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
