Mahaan
சமீபத்தில் அமேசான் OTT தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் மகான். இந்த திரைப்படம் சியான் விக்ரமிற்கு ஒரு நல்ல கம்பேக் திரைப்படமாக அமைந்துள்ளது என பலரும் பாராட்டி வருகின்றனர்.
படத்தில் காந்தியவாத கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கும் குடும்பத்தை சேர்ந்த விக்ரம், தன்னுடைய ஆசைக்காக குடி, சாராயம் விற்கும் தொழிலதிபராக மாறுகிறார். காந்தியவாத கொள்கைகளை தீவிரமாக கடைபிடிக்கும் விக்ரமின் மகன் அவரை எதிர்க்கிறார் என்பது போல காட்சிப்படுத்த பட்டிருக்கும்.
இதையும் படியுங்களேன் – எல்லாம் ஒரு கணக்குதான்.! சீமான் படம் பார்த்ததின் பின்னணியிலும் விஷயம் இருக்காம்.!
இது பற்றி பல்வேறு கேள்விகளை கார்த்திக் சுப்புராஜ் எதிர்கொண்டு பதிலளித்து வந்தார். அதில், படத்தில் ஒரு வசனம் இருந்தது. அதனை சென்சாரில் எடுக்க சொன்னார்கள் என கூறினார்.
அந்த வசனம் என்னவென்றால், காந்தியை சுட்டு கொன்றதே உங்களை மாதிரி ஒரு கொள்கை வெறி பிடித்த ஒரு மனிதன் தான் (காந்தியை சுட்டுக்கொன்ற கோட்ஸே) என்று இருந்ததாம். பின்னர் அதனை சென்சார் அதிகாரிகள், இந்த வசனம் வந்தால், பிரச்சனை ஏற்படும் எனவே வேண்டாம் என கூறி நீக்க சொல்லிவிட்டனராம்.
TVK Vijay:…
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…