×

விக்ரமின் ‘மகான்’ பட தலைப்புக்கு பின்னால் இப்படி ஒரு கதையா? - கசிந்த தகவல்

 
mahaan

விக்ரமும், அவரது மகன் துருவ் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ளார். விக்ரமின் 60 வது படம் என்பதால், சீயான் 60 என அழைக்கப்பட்டு வந்தது. இப்படத்தில் விக்ரம் நெகடிவ் சாயல் கொண்ட கதாபாத்திரத்திலும், துருவ் விக்ரம் போலீசாகவும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதன் முக்கிய காட்சிகள் டார்ஜிலிங்கில் படமாக்கப்பட்டன. தொடர்ந்து நேபாள எல்லையில் படப்பிடிப்பை நிறைவு செய்தனர்.

chiyan 60

இப்படத்திற்கு ‘மகான்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு நேற்று வெளியிட்டது. இதில், பைக் ஓட்டும் விக்ரமின் தலையில் கொம்பு இருப்பது போலவும், பின்னால் பல கைகள் இருப்பது போலவும் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

mahaan

மகான் என்கிற தலைப்பை வேறு ஒரு தயாரிப்பாளர் பதிவு செய்து வைத்திருந்தார். அவரிடம் பேசிய படக்குழு இறுதியாக ரூ.7 லட்சம் கொடுத்து தலைப்பை வாங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News