ஹீரோயினை விட அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ!... மகாநதி சீரியல் சம்பள விவரம் தெரியுமா?

 
ஹீரோயினை விட அதிக சம்பளம் வாங்கும் ஹீரோ!... மகாநதி சீரியல் சம்பள விவரம் தெரியுமா?

Mahanadhi: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் ஹீரோ மற்றும் ஹீரோயினுக்கு கொடுக்கும் சம்பளம் குறித்த ஆச்சரிய அப்டேட் வெளியாகி இருக்கிறது. 

பெரும்பாலும் சீரியல்களில் ஹீரோயின் ரோலுக்கு தான் அதிக முக்கியத்துவம் இருக்கும். சில சீரியல்கள் மட்டுமே இதில் முரண்பட்டு ஹீரோக்கு நல்ல ரோலை கொடுத்து, வித்தியாசமாக ஹீரோயிசம் செய்ய வைக்கவும் வாய்ப்பு உண்டு. 

அந்த வகையில் சன் டிவி சீரியல்களின் ப்ரைம் டைமில் இதை போன்ற சீரியல்களை பார்த்து கொண்டு இருந்த நிலையில் விஜய் டிவியின் மகாநதி அந்த இடத்தினை தற்போது பிடித்துள்ளது. இதில் ஹீரோவாக நடிக்கும் விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். 

அந்த கேரக்டரில் நடிக்கும் சுவாமிநாதனுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. இவரின் முதல் சீரியலும் இதை போன்ற வரவேற்பையே இவருக்கு கொடுத்த காரணத்தால் தற்போது நடிக்கும் மகாநதிக்கு இவருக்கு ஒரு நாள் சம்பளமாக 15 ஆயிரம் வரை கொடுக்கப்படுகிறது.

ஆனால் ஹீரோயின் காவேரி ரோலில் நடிக்கும் லட்சுமிபிரியாவுக்கு வெறும் 10 ஆயிரம் மட்டுமே சம்பளமாக தருவதாக கூறப்படுகிறது. இன்னொரு ஹீரோவாக நிவின் கேரக்டரில் நடிக்கும் ருத்ரனுக்கும் 10 ஆயிரம் சம்பளமாகவும், கங்கா கேரக்டரில் நடிக்கும் ஹெப்சிபாவுக்கும் 6 ஆயிரம் வரை தருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

From Around the web