maharaja
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் சீன ரசிகர்களை கண்கலங்க வைத்திருக்கின்றது.
தமிழ் சினிமாவை மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரின் 50-வது படமாக உருவானது மகாராஜா. நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், அபிராமி, நட்டி, சிங்கம் புலி, மம்தா மோகந்தாஸ், சாச்சனா ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி வெளியானது. மிகச் சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: விடாமுயற்சிக்கே விடிவுகாலம் பொறக்கல!.. அதுக்குள்ள அடுத்த படமா?!.. கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க சார்!…
தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. இந்த திரைப்படத்தின் மூலமாக நடிகர் விஜய் சேதுபதி மீண்டும் பிரபலமாகிவிட்டார். இந்த திரைப்படத்திற்கு முன்பு வரை பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக சிறந்த கம்பேக் படமாக மகாராஜா திரைப்படம் அமைந்திருந்தது.
china
இந்த திரைப்படத்தை கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி சீனாவிலும் இப்படத்தை வெளியிட்டு இருந்தார்கள். சீனாவில் மொத்தம் 40 ஆயிரம் திரையரங்குகளில் மகாராஜா வெளியிடப்பட்டது. சிறப்புத் திரையிடராக கடந்த ஒரு வாரமாக சீனாவில் படத்தை வெளியிட்டு இருந்தார்கள். இந்த படத்திற்கு சீன மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். சிறப்பு திரையிடல் வழியாக மட்டும் இதுவரை 2.2 கோடி ரூபாயை படம் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
சீனாவில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்த தங்கல் திரைப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய வரவேற்பை பெற்ற திரைப்படமாக மகாராஜா திரைப்படம் மாறி இருக்கின்றது. இந்த திரைப்படத்தை பார்த்த சீன ரசிகர்களின் ரியாக்ஷன் வீடியோவானது. தற்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: Gossip: எல்லாம் போச்சு… அக்கட தேசத்தை நம்பி இருந்த பேரை கெடுத்துக்கிட்ட சன் நடிகர்…
இந்த படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் எப்படி எமோஷனலாகி கண்ணீர் சிந்தினார்களோ அதே போல சீன ரசிகர்களும் இப்படத்திற்கு கண்ணீர் சிந்தி இருக்கிறார்கள். இப்படம் தொடர்பான வீடியோவானது தற்போது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது. இந்தியாவைத் தாண்டி சீனாவிலும் மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…